Posts

அல்கெமி

அல்கெமி ************ சீப்பின் பற்களில்  விரல்களால் பியானோ வாசிக்கிறாள் சிறுமி. சடைபின்னுகிற அம்மாவின் கைகளிலிருந்து பிடுங்கிய சீப்பை மறுபடியும் இசைக்கிறாள்.  ரோஜாநிற உதடுகளிலிருந்து பியானோ இசை வழிகிறது. பின்னி முடித்ததும் சீப்பை பிடுங்கித் தன் தலையில் சொருகுகிறாள் அம்மா. இசைத்துக்கொண்டிருந்த பியானோ இப்போது கிரீடமாகிவிட்டது. *

// பிள்ளை//

பிள்ளைகளில்லாத சவக்களை படிந்த பெரியதொருவீட்டில் நெடுநாள் நண்பனின்  மனைவியின்கையால் ஆரஞ்சு பானம் அருந்தித் திரும்பினேன். ஏக்கமும் நிராசையுமான முகமுள்ள தேவதையின் நிசப்த அழுகையை சுமந்தபடி. மருத்துவங்களும் நம்பிக்கைகளும் கற்பிதங்களும் கடவுளரும் கைவிட்ட ஆனந்த் என்ற பெயருள்ள  உற்சாகப் பிறவியைச் சூடிக்கொண்ட சுடர்க்கொடி அவள். வீட்டுப் பாடம் எழுதிய என் பிள்ளைக்குக் கேட்காத குரலில்  நண்பனின் ஆற்றாமையை பிள்ளையில்லாப் பெருந்துயரைக் கதைத்துக்கொண்டிருந்தேன் மென்குரலில் மனைவியிடம்.   அடுத்தமுறையென் வீட்டுக்கு ஆனந்த் வந்தபோது ஆழ்ந்த சிந்தனையுடன் என்னை தனித்தழைத்துப் போனான் என் மகன். காதருகில் வந்து ரகசியமாய் மென்குரலில் கேட்டான். அப்பா...ஆனந்த் அங்கிளை நான் அப்பான்னு கூப்பிடட்டுமா.? *****

சிறுகதை : ரூஹானி

"ரூஹ்"என்பதற்கு அரபிமொழியில் உயிர்     என்று  பொருள். ரூஹூ ரூஹூ என்று  கூவுகிற    பறவை யொன்றை மலையாள தேசத்து இஸ்லாமிய மக்கள் ரூஹானிக்கிளி என்றழைப்பார்கள்.கிளி என்றால் நமக்குக் கிளி மட்டுமே. அவர்களின் சொற்களில் நம் கிளி அவர்களின் தத்தம்மா அல்லது தத்தா. தத்தை யென்பதே தூயதமிழ்ச்சொல் தான்.மலையாளதேசத்தினர்அவர்களின் பேச்சுவழக்கில் கிளிகளென்பது பறவைகள் என்றே பொருள்தரும். ரூஹானிப்   பறவைகளை ரூஹானிக் கிளிகள் என்றழைக்கிற அவர்களிடம் ஏராளமான நம்பிக்கைகளிருந்தன. ஏகப்பட்ட கதைகளிருந்தன. ஆழமான இறைநம்பிக்கையின் பின்னணியுள்ள நாட்டுப்புறப்பாடல்களிருந்தன. ரூஹானிப்பறவைகள் சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டவையென்றும்  மரணத்தைக் கொண்டு  வருகிற தூதுவனின் அடிமைகளெனவும் மனிதர்களிடத்தே மரணத்தை  அறிவிக்கிற பறவைகளெனவும் வாய் வழிக் கதைகளிருக்கின்றன. இந்த ரூஹானிப் பறவைகளின் குரலின் வருகையை, முதலில் காதுற்றவர்கள் சட்டெனப் பிரார்த்தனையைத் தொடங்கி விடுவார்கள்.  அக்கரையில் நிகழ்கிற மரணத்தை  இக்கரையில் அறிவிக்க வந்திருக்கிறதென்று தமக்குள் முணுமுணுத்துக் கொள்வார்கள்.   ரூஹானிகளின் தனித்த பிரத்யேகமான குரலொன்றை அதன்

கானக மகள்

  மலைவாசிக் குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப்படிக்கும்  வேட்டையாடிப் பிழைப்பவனின்  ஆறாவது மகளான  ஆதிகுடிச் சிறுமியின் கனவில் என்ன இருக்கும்.?    வேட்டுவத் தந்தை இருகைககளால்   பிழிந்தெடுத்த மலைத்தேனீக்களின்  பெருந்தேனடையின் ருசியிருக்குமா.?    அம்மையின் கைகளால் திரித்தெடுத்த தினைமாவின்  மிருது இருக்குமா.?    அந்திமயங்கும் நேரத்தில் வாட்டிய  உடும்புக்கறியின் நிணநீர் வாசனையிருக்குமா.?    அடர்மழை நாளொன்றில் குடிசைக்குள் எரிந்து கொண்டிருந்த  விளக்கில் உருகிய மிருகக் கொழுப்பின் நாற்றமிருக்குமா.?    கஞ்சாவின் ராஜபோதையில்   கிறங்கியபடிப் பாடிக்கொண்டிருந்த  பாட்டனின் மழைப்பாடல்  ஞாபகம் இருக்குமா.?    தேன் வாசனைமோகித்து வளவுக்குள் திரிந்தலைந்த கரடியின்  கண்கள் ஒளிர்ந்த நினைவிருக்குமா.?    காட்டுப் பன்றியொன்றை  இறைச்சிக்காய்த் தகப்பன்  தலைவேறு உடல்வேறாய் கரகரவென அறுத்துப்போட்டது  நினைவிருக்குமா.?    கூப்பிடுதூரத்துச் சிறுகுடிசையொன்றில்  தீட்டுப் பெண்களுக்குச் சோறு சுமந்தது கனவில் வருமா.?    டீச்சராகிவிடவேண்டுமென்ற  வைராக்கியத்தில் குடிநீங்கி  காப்பகத்தில் தங்கிப் படிக்கும்  கானகமகளை ஜாதிப்பேர் விளி
கடலோடியின் இரவுக்குள்ளும் பயணிக்கத்தெரிந்த கவிஞனின் எலும்பு துளைத்துக் கொக்கரிக்கிறது நீர்ப்பெருவனத்தின் கொடுங்காற்று.