அல்கெமி
அல்கெமி ************ சீப்பின் பற்களில் விரல்களால் பியானோ வாசிக்கிறாள் சிறுமி. சடைபின்னுகிற அம்மாவின் கைகளிலிருந்து பிடுங்கிய சீப்பை மறுபடியும் இசைக்கிறாள். ரோஜாநிற உதடுகளிலிருந்து பியானோ இசை வழிகிறது. பின்னி முடித்ததும் சீப்பை பிடுங்கித் தன் தலையில் சொருகுகிறாள் அம்மா. இசைத்துக்கொண்டிருந்த பியானோ இப்போது கிரீடமாகிவிட்டது. *