அல்கெமி
- Get link
- X
- Other Apps
அல்கெமி
************
சீப்பின் பற்களில்
விரல்களால்
பியானோ வாசிக்கிறாள் சிறுமி.
சடைபின்னுகிற அம்மாவின்
கைகளிலிருந்து பிடுங்கிய சீப்பை
மறுபடியும் இசைக்கிறாள்.
ரோஜாநிற உதடுகளிலிருந்து
பியானோ இசை வழிகிறது.
பின்னி முடித்ததும் சீப்பை
பிடுங்கித் தன்
தலையில் சொருகுகிறாள் அம்மா.
இசைத்துக்கொண்டிருந்த பியானோ
இப்போது
கிரீடமாகிவிட்டது.
*
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment